Home Tamil Nadu பெண் ஊழிர்களுக்கு விரட்டி விரட்டி பாலியல் தொல்லை கொடுத்து கொவை கல்லூரி இயக்குனர்

பெண் ஊழிர்களுக்கு விரட்டி விரட்டி பாலியல் தொல்லை கொடுத்து கொவை கல்லூரி இயக்குனர்

SHARE

கோவை சரவணம்பட்டியில் உள்ள SNS கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் (64) பெண் ஊழியருக்கு பாலில் தொல்லை கொடுக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கல்லூரியில் இந்த பெண் கடந்த 2 ஆண்டுகளாக இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். 2 வருடமாக இந்த பெண்ணிற்கு சுப்ரமணியம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த பெண் மட்டுமல்லாது மற்ற ஊழியர்கள் மாணவிகளுக்கும் சுப்ரமணியம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது,

கல்லூரியின் தலைமை நிர்வாகியிடம் இந்த பெண் இது குறித்து புகார் அளித்துள்ளார். தலைமை நிர்வாகி சுப்ரமணியத்தின் மகன் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. மேலும் வெளிநாடுகளில் இது போன்ற சமாச்சாரங்கள் சஜகம் தான் என சமரசம் பேசி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

வெளியில் புகார் அளித்தால் வேலையை விட்டு நீக்கி விடுவதாகவும் கொலை செய்து விடுவதாகவும் பெண் மிரட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம்

இதை தொடர்ந்து சுப்ரமணியம் லீலைகளை அந்த பெண் ரகசியமாக செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுப்ரமணியத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிலாக புகார் அளித்த பெண்ணை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து அந்த பெண் தான் ரகசியமாக பதிவு செய்த அந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here