கோவையை சேர்ந்த தமிழருக்கு ஆஸ்கர் விருது

கோவையை சேர்ந்த தமிழருக்கு ஆஸ்கர் விருது

SHARE

கோவை சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் பட் என்பவரின் மகன் கிரண் பட் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் முக பாவனைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றும் (FACIAL PERFORMANCE CAPTURE SOLVING SYSTEM) தொழில்நுட்பப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக கூறி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவின் (SCIENTIFIC AND TECHNICAL ACHIEVMENTS) 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

kiran-bhat-from-coimbatore-wins-oscar-for-technical-achievements

இதுகுறித்து விருதுக்குத் தேர்வாகியுள்ள கிரண் பட்டின் தந்தை கே.சீனிவாஸ் பட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை சாய்பாபா காலனியில் நான் வசித்து வருகிறேன். ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (“பிட்ஸ்’) மின்னியல், மின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியியல் துறையில் என் மகன் கிரண் பட் பட்டங்களைப் பெற்றுள்ளார். பின்னர், அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற அவென்ஜர்ஸ், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், வார்கிராப்ட், ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7, ஸ்டார் வார்ஸ் ரோக் ஒன் உள்ளிட்ட திரைப்படங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கிரண் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் கிரண் பட்டுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY