Home India தனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு

தனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு

SHARE

இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, தற்போது புதுவை மாநிலத்தின் கவர்னராக பணியாற்றிவரும் இவருக்கும் அம்மாநில அமைச்சர்களுக்கும் கடும் பணிப் போர் நடந்து வருவது நாடறிந்தது. கிரண் பேடி அவர்கள் நிகழ்ச்சி ஒன்றை பார்வையிட சென்ற போது நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதுவரை எந்த கவர்னரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறும் அளவிற்கு அவரின் செயல் அமைந்துள்ளது.

”நிகழச்சிக்கு வருபவர்களுக்கு வழி காட்டும் அறிவிப்புகள் வைக்கவில்லையே ஏன் அதை வைத்தால் மாற்று திறனாளிகள் குழந்தைகள் பெண்கள் எளிதில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல ஏதுவாக இருக்குமே” என அதிகாரிகளிடம் கிரண் பேடி பேசிக் கொண்டிருக்கின்றார்.

”இந்த இடத்தில் அதை வைக்கலாமே” என திரும்புகின்றார் கிரண் பேடி, அங்கு அவரது புகைப்படம் போட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கிரண் பேடி. ”யார் இதை வைத்தது ஏன் இந்த வெட்டி செலவு , பணத்தை ஏன் வீணாக்குகின்றீர்கள்?” என அதிகாரிகளை கடிந்ததோடு தன் கையாலே தனது புகைப்படம் போட்ட பேனரை அகற்றுகின்றார் கிரண் பேடி

”இதுக்கு யார் செலவு பன்னது எவ்வளவு செலவு பன்னீங்க” என கேட்டு தன் சொந்த பணத்தில் அதற்குரிய தொகையையும் கிரண் பேடி எடுத்து கொடுக்கின்றார். இனிமே இந்த மாறி வைக்காதீங்க என அனைவரையும் கண்டிக்கின்றார் கிரண் பேடி.

பேனர் வைத்தால் பாராட்டு கிடைக்கும் என நினைத்த அதிாரிகள் திட்டு கிடைத்ததை எதிர் பார்க்கவில்லை.

அடுத்து உள்ளே செல்கின்றார் கிரண் பேடி. ஒருவர் விலை உயர்ந்த சால்வையை போட வருகின்றார். ஏன் இப்படி பணத்தை வீணாக செலவு செய்கின்றீர்கள் என கிரண் பேடி மீண்டும் கண்டிக்க, இல்ல மேடம் இது ஆபிஸ் செலவு தான் என அதிகாரிகள் கூறியதும் அவருக்கு கோபம் அதிகமாகின்றது. சால்வை போடுவது ஆபிஸ் செலவா அரசு பணத்தை ஏன் இப்படி வீணாக்குகின்றீர்கள் என மீண்டும் கண்டித்து அந்த சால்வைகை்குரிய பணத்தை தனது சொந்த பணத்தில் இருந்து எடுத்து கொடுத்து அந்த சால்வையை வாங்கி அருகில் இருந்த படத்திற்கு போட்டு விட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார் கிரண் பேடி.

மரியாதை மனசில் இருந்தால் போதும் இப்படி அரசு பணத்தை வீணாக்காதீர்கள் எனக் கூறி அதிகாரிகளுக்கு புத்திமதி சொல்லிவிட்டு சென்றார் கிரண் பேடி.

இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கிரண் பேடியின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பாராட்டை பெற்று வைரலாகி வருகின்றது. மற்ற தலைவர்கள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here