Home India சொல்லாமல் விளையாட சென்றதற்காக கொடூர தாயின் கோர முகம் இணையத்தில் வைரலாகும் காணொளி

சொல்லாமல் விளையாட சென்றதற்காக கொடூர தாயின் கோர முகம் இணையத்தில் வைரலாகும் காணொளி

SHARE


தன்னிடம் சொல்லாமல் விளையாட சென்றதற்காக 5 வது சிறுமியை பெற்ற தாயை கயிற்றில் கட்டி தொங்க விட்ட சிறுமி கதற கதற சுழட்டி விட்டு தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

உபி மாநிலம் மதுரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 5 வயது சிறுமியின் கையை கட்டில் வீட்டின் கதவின் மேல் கட்டி தொங்க விட்டுள்ளார் அந்த தாய். பின்னர் குழந்தையை சுழட்டி விட்டு பிரம்பால் தாக்குகின்றார். நீண்ட நேரம் அடி தாங்காமல் குழந்தை கதறி அழுததில் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர்.

உடனே தாயை தடுத்து குழந்தையின் கையில் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து குழந்தையை இரக்கி விடுகின்றனர். இதனால் மேலும் ஆத்திரப்பட்ட அந்த தாய் இந்த குழந்தைய தானே இரக்கி விட்டீங்க இன்னோரு குழந்தைய அடிக்கிறேன் என்ன செய்வீங்க என்ற பாணியில் வீட்டிற்கு உள்ளே சென்று கட்டிலில் இருந்து பிஞ்சு குழந்தையை தாக்க ஆரம்பிக்கின்றார்.

தன்னை இரக்கி விட்டதும் சிறுமி தாயை நோக்கி செல்கின்றது. மீண்டும் அதே 5 வயது சிறுமியை ஆத்திரம் தீர தாக்குகின்றார் அந்த தாய்!

கட்டிலில் வைத்து தனது இரண்டு குழந்தைகளையும் இரக்கமின்றி தாக்க துவங்குகின்றார்.

இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி பெற்ற தாயே கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here