Home World எக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய...

எக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை

SHARE

குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்வது பெற்றோர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் , அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் படும் பாட்டை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுவும் சுட்டி குழந்தைகள் என்றால் கேட்கவே தேவையில்லை. ஏண்டா வந்தோம் என ஆக்கி விடுவார்கள். அவர்களை பத்திரமாக மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் நாம் சாட்பிட்டதெல்லாம் ஜீரணம் ஆகிவிடும். குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவ்வாறு தவறும் பட்சத்து எதிர்பாராத விபரீதங்கள் நடக்கும் என்பதையும் உணர்த்தும் இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

அதிகாரிகளையே சிறுவன் அலற வைத்துள்ளான். தெற்கு சீனாவில் உள்ள சியோலன் என்ற ரயில் நிலையத்திற்கு தந்தை ஒருவர் தனது மகனை அழைத்து வந்துள்ளார். லக்கேஜ்களை பரிசோதனை செய்யும் எக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்தில் அருகே மகனுடன் நின்றுள்ளார் தந்தை. எக்ஸ்ரே இயந்திரத்தை அவர் கடந்து சென்றதும் மகனை காணவில்லை என சத்தம் போட்டுள்ளார். அங்கும் இங்கும் தேடியுள்ளார்.

தந்தை அசந்த நேரம் பாத்து அந்த சிறுவன் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் புகுந்தது தந்தைக்கு தெரியவில்லை. எங்க என் மகன் எங்க என் மகன் என அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சிறுது நேரத்தில் பார்சல் வெளியே வருவது போன்று சிறுவன் எக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து விழுந்துள்ளான். எதுவுமே நடக்காதது போன்று சிறுவன் சர்வ சாதாரணமாக எழுந்து நடந்து செல்கின்றான்.

எக்ஸ்ரோவில் வித்தியாசமான உருவத்தை பார்த்த அதிகாரிகள் அலறியுள்ளனர். பின்னர் அது சிறுவன் எனத் தெரிய
வந்துள்ளது.

இதே போன்று ஒரு பெண் ஒருவரும் சமீபத்தில் லக்கேஜை விட்டு பிரிய மணமில்லாமல் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்றது குறிப்பிடதக்கது.

சமீபத்தில் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் நுழைந்த பெண்

இது போன்று எக்ஸ்ரே இயந்திரங்களுக்குள் செல்வது உடலுக்கு உடனே எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனினும் பின்னர் நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்துக் கூடும் எனக் கூறப்படுகின்றது.

அந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here