Home India புதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்

புதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்

SHARE

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் ல் 4 லட்சம் ரூபாயை ஆபேஸ் செய்த இளம் பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.

நள்ளிரவில் வங்கிக்கு பணம் எடுக்க வந்த சித்ரா என்ற பெண் வங்கி இயந்திரத்தின் பணம் போடும் கதவு சரியாக அடைக்கப்படாமல் இருந்ததை கண்டுள்ளார். உடனே வங்கி எந்திரத்தின் கதவை திறந்து அதில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அவர் பணத்தை எடுக்கும் போது அந்த ஏடிஎம் ல் பணம் எடுக்க சிலர் வருகின்றனர். உடனே எடுத்த பணத்தை மறைத்து வைத்துக் கொள்ளும் அந்த பெண், வந்தவர்களுடன் எதுவுமே நடக்காதது போன்று பேச்சு வார்த்தை கொடுத்து சமாளித்து அவர்கள் சென்றதும் பணத்தை தான் போட்ட சால்வையில் சுருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்று விடுகின்றார்.

வங்கி ஏடிஎம் ல் பணம் நிரப்ப வந்தவர்கள் சரியாக வங்கி இயந்திரத்தின் கதவை மூடவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அந்த வங்கியின் மும்மை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் சிசிடிவி வாயிலாக பார்த்து வங்கியின் சார்பில் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் சித்ரா என்பதும் அவர் பெங்களுரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

வங்கி இயந்திரத்தை தான் உடைக்கவில்லை எனவும் கதவு திறந்திருந்தால் பணத்தை எடுத்தேன் என அந்த பெண் கூறியுள்ளார்.

திருடிய 4 லட்சம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அவர் பட்டு புடவை ஒன்றை வாங்கியுள்ளார். மீதம் அவரிடமிருந்து 3.90 லட்சம் ரூபாயை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் வங்கி ஊழியர்களுக்கு ஏதும் தொடர்பு உள்ளதா என விசாரனை நடத்தப்படும் என காவல்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேராசை பெரும் நஷ்டம் என்பது இந்த பெண்ணிற்கு சரியாக பொருந்தும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here