Home India எஸ்பி ஆபிசிஸ் கேட்டை இழுத்து பூட்டிய விஹெச்பியை சேர்ந்த அமைப்பினர் மீது தடியடி நடத்திய காவல்துறை

எஸ்பி ஆபிசிஸ் கேட்டை இழுத்து பூட்டிய விஹெச்பியை சேர்ந்த அமைப்பினர் மீது தடியடி நடத்திய காவல்துறை

SHARE

உபி மாநிலம் அலிகாரில் விஹெச்பி ஐ சேர்ந்த ஹிந்து அமைப்பினர் மீது போலிஸ் தடியடி நடத்தியுள்ளனர். Hindu Jagran Manch என்ற அந்த அமைப்பினர் அலிகார் காவல் துறை எஸ் எஸ் பி அலுகலத்தை காவி துணியால் கட்டி இழுத்து மூடி உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

போலிசார் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்காததால் எஸ் எஸ் பி அலுவலகத்திற்குள் புகுந்த அவர்களை போலிசார் தகடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

தங்களது அமைப்பை சேர்ந்தவரை தாக்கி நபரை கைது செய்யக் கோரி விஹெச்பி ஐ சேர்ந்த மேற்குறிப்பிட்ட அமைப்பினர் காவல்துறை எஸ் எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் எஸ் பி ஆபிசின் கேட்டை காவி துணியால் இழுத்து மூடி உள்ளே சென்றுள்ளனர்.

போலிசார் இவர்கள் மீது, கலவரத்தில் ஈடுபட்டதாகவும் (147 பிரிவு) , படு பயங்கர ஆயுதங்களுடன் பயன்படுத்தியதாகவும் ( 148 பிரிவு) காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் (332 பிரிவு) , மேலும் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் (307 பிரிவு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 12 நபர்களை கைது செய்துள்ளனர்.

எனினும் Hindu Jagran Manch நிர்வாகி Sanju Bajaj தாங்கள் அமைதியாகத் தான் போராடியதாகவும் போலிசார் தடியடி நடத்தியதில் எங்கள் அமைப்பு இளைஞர்கள் 22 பேர் காயமடைந்ததாகவும், எங்களை அமைப்பை சேர்ந்தவரை தாக்கியவரை கைது செய்யுமாறு நாங்கள் போராடினோம் எனக் கூறியுள்ளார்.

அலிகார் எஸ் பி அஷிதோஷ் கூறுகையில் , அவர்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் கூறியும் அவர்கள் கேட்கவில்லை, காவல் துறை அலுவலக கேட்டை இழுத்து மூடியதோடு தகாத முறையில் நடந்தனர் எனவே தடியடி நடத்தி அவர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here