Home India ராஜபாளையத்தில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியீடு

ராஜபாளையத்தில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியீடு

SHARE


மதீஸ்வரன் – பிரியா இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜபாளையம் தெற்குவெங்காநல்லூரில் வசித்து வந்துள்ளனர். மதீஸ்வரன், பிரியா வின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி பிரியா ராஜபாளையம் புதிய பேருந்துநிலையத்தில் நின்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த கணவர் மதீஸ்வரன், பிரியா இந்த நேரத்தில் எங்கு செல்கின்றாய் எனக் கேட்டதாக கூறப்படுகின்றது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் பேருந்து நிலைய வளாகத்திலேயே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் மதீஸ்வரன் தான் வைத்திருந்த அரிவாளால் ப்ரியாவை பட்டப்பகலில் பலர் முன்னிலையில் சரமாரியாக வெட்டினார். வெட்டு பட்டு சரிந்த பிரியாவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதீஸ்வரனையும் போலிசில் ஒப்படைத்தனர்.

கடந்த மாதம் இறுதியில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மனைவியை கணவர் சரமாரியாக வெட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தடுக்க வரும் நபர் அரிவாளை பார்த்து பயந்து நிற்கின்றார், பின்னர் பொதுமக்கள் சிலர் கூடியதும் மதீஸ்வரன வெட்டுவதை நிறுத்தி விட்டு செல்கின்றார்.

பிரியா மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here