Home India இது என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க முடிகின்றதா செய்தியை கேட்டால் அதிர்ந்து போவோம்

இது என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க முடிகின்றதா செய்தியை கேட்டால் அதிர்ந்து போவோம்

SHARE


புகைப்படத்தை பார்த்ததும் வாலிபர் பெண்ணை பைக்கில் அழைத்து வந்திருப்பார் யாராவது நிறுத்தி கண்டித்திருப்பார்கள் என நினைக்க தொன்றும் ஆனால் நடந்த சம்பவத்தை கேள்வி பட்டால் அதிர்ச்சி அடைவோம்.

ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் இறந்த தாயின் சடலத்தை மகன் உடற்கூறு அய்வு செய்யும் பிணவறைக்கு பைக்கில் எடுத்து வந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் டிகாம்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

குன்வர் பாய் என்ற பெண் முஸ்தகர் என்ற கிராமத்தில் நேற்று பாம்பு கடித்து சிகிச்சை உடனயாடி கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார். பாம்பு கடித்து மரணம் அடைந்ததால் உறவினர்கள் மோகன்கர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலிசார் வந்து பார்த்து விட்டு உடலை போஸ்மாட்டம் செய்ய வேண்டும் , எனவே பாடியை போஸ்ட்மாட்டம் செய்யும் இடத்திற்கு எடுத்து செல்லவும் என உறவினர்களிடம் கூறி விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

இறந்த பெண்ணின் மகன் தாயின் சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்சை பல முறை அழைத்ததாகவும் அவர்கள் வர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வேறு வழியின்றி இறந்த தாயை பைக்கின் மீது அமர வைத்து உடல் விழுந்து விடாமல் இருக்கு தாயின் இரண்டு கால்களை பைக்கில் கட்டி அமர்ந்திருப்பது போன்று உட்கார வைத்து போஸ்ட்மாட்டம் செய்யும் இடத்திற்கு எடுத்து வந்துள்ளார் மகன். அதை தான் நீங்கள் காணொளியில் காண்கின்றீர்கள்.

பைக்கில் தாயை அழைத்துக் கொண்டு ஒரு ரவுண்டு போக வேண்டும் என மகன்கள் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த மகனுக்கு செத்த தாயின் பிணத்தை பைக்கில் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மன நிலையை கற்பனை கூட செய்து பார்க்க இயலாது.

இது குறித்து மருத்துவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் கருத்து கூற மறுத்து விட்டதாக சீ நியுஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here