Home Tamil Nadu ஒன்னு தானா ? இறந்தவரின் உடலை கொடுக்க பட்டாசு லஞ்சம் , சினிமா மிஞ்சும் வில்லன்கள்

ஒன்னு தானா ? இறந்தவரின் உடலை கொடுக்க பட்டாசு லஞ்சம் , சினிமா மிஞ்சும் வில்லன்கள்

SHARE

இறந்தவரின் சடலத்தை கொடுக்க மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்கள் பட்டாசை லஞ்சமாக பெரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இத்தன பேரு இருக்குகோம் என்ன ஒரு பட்டாசு பெட்டி தானா என அவர்கள் இரக்கமற்று கேட்கும் சினிமாவை மிஞ்சும் விதத்திலான காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மதுரையின் பிரதான அரசு மருத்துவமனையான அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரக்குடி அருகே பாண்டிகாண்மாய் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிகிச்சை பலன் இன்றி கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டு உடற்கு கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆழந்த சோகத்தில் உடலை வாங்க வந்த உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர். பணமாக வேண்டாம் பட்டாசு வாங்கிக் கொடுங்கள் என அவர்கள் கேட்க வேறு வழியின்றி அந்த சோகத்திலும் 1500 ரூபாய்க்கு அவர்களுக்கு புது பட்டாசுகளை வாங்கிக் கொடுத்து விட்டு உடலை பெற்று சென்றுள்ளனர்.

இதன் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகின்றது.

மருத்துவர் போன்ற தோற்றத்தில் உள்ள ஒருவர் பட்டாசை உறவினர்கள் எடுத்துக் கொண்டு போகும் போதும் இதெல்லாம் கம்போண்டர் கிட்ட கொடுங்க என்ற கருத்தில் பேசுவதும் காணொளியில் இடம் பெற்றுள்ளது. மேலும் இரக்கமே இல்லாமல் இதை பார்த்து அங்கு இருப்பவர் ஒருவர் சிரிப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

ஒரு காவல்துறை அதிகாரியும் அங்கே இருப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.

சினிமாவில் கூட இப்படி லஞ்சம் வாங்கும் காட்சிகள் வெளியாகியிருக்காது என்று கூறும் அளவில் மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமூக வலைதளத்தில் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here