Home Tamil Nadu ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நடந்த கள்ளக்காதல் பஞ்சாயத்து வைரலாக பரவும் வீடியோ

ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நடந்த கள்ளக்காதல் பஞ்சாயத்து வைரலாக பரவும் வீடியோ

SHARE

இப்படி ஒரு சம்பவம் ஏர்வாடியில் நடந்திருப்பதே வெளிச்சத்திற்கு வராமல் இருந்துள்ளது. ஏர்வாடி காவல் நிலையத்தில் கள்ளக் காதல் தொடர்பாக நடக்கும் காரசார பஞ்சாத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சமீபத்தில் நீதிமன்றம் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்வது குற்றமல்ல எனக் கூறியது. இதை கேட்டதும் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பா என பெரும்பாலனவர்கள் இதை விரும்பவில்லை. பல்வேறு விமர்சனங்களை சமூக வலைதளத்தில் எழுப்பினர்.

இந்த நிலையில் திருமணமான இரண்டே ஆண்டில் வெளிநாட்டில் கணவர் இருக்கும் நிலையில் மற்றொரு ஆணுடன் ஓடிப் போன பெண் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை போலிசார் தேடி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

பெண்ணின் உறவினர்கள் பதறிப் போய் காவல் நிலையத்திற்கு வந்த பார்த்தால், ”சார் சட்டமெல்லாம் இப்ப மாறி போச்சு சட்டம் அப்படி சொல்லுத அந்த பொண்ணு விரும்பம் தான்” என அங்கிருந்த இன்ஸ்பெக்கடர் கூறியது உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

”ஏன் சார் கல்யாணமான பொண்ணு சார் அது நீங்க புது பொண்ணுன்னு நினைச்சீட்ங்களா” என உறவினர்கள் கேட்க தெரியும்பா சட்டம் அப்படி தான் இருக்கு எல்லாம் அந்த பொண்ணு விரும்பம் தான் எனக் கூற உறவினர்களுக்கு மேலும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருக்காரு சார் அந்த பொண்ணு எங்களோட அனுப்புங்க என உறவினர்கள் மன்றாடியும் எந்த பலனும் இல்லை.

ஏன் சார் கல்யாணமான பொண்ணு ஒருத்தனோட ஓடி வந்தா அனோட சேத்து வைக்கிறது தான் உங்க சட்டமா சார் என அவர்கள் கேட்டது. அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் சுருக்கேன குத்தியது போன்று இருந்தது.

உறவினர்ளே நொந்து போய் காவல் நிலையம் வந்திருக்கும் நிலையில் அவர்களிடம் அங்குள்ள காவலர்கள் காட்டமாக நடந்து கொள்வதை காணொளியில் காண முடிகின்றது பெண்ணிடம் பேச வேண்டும் எனக் கூறியரை அடிக்க பாய்ந்து நான் சொல்றது தான் இங்க வேத வாக்கு என இன்ஸ்பெக்டர் பேசுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இதை எல்லா வற்றையும் உறவினர்களில் ஒருவர் காணொளி எடுப்பது தெரியாததால் அங்கிருந்தவர்கள் வழக்கும் போல் பஞ்சயாத்தை நடத்தினர்.

தற்போது இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அந்த நபரை இந்த பெண் திருமணத்திற்கு முன்னரே காதலித்தாகவும் அந்த நிலையில் தனக்கு திருமணம் நடந்ததாகவும் பெண் தரப்பில் கூறப்படுகின்றது.

அந்த பெண்ணின் பெயர் நளாயினி என்பது , கணவரின் பெயர் ஆனந்த பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள கணவர் மனைவியை அழைத்துக் கொள்ள விசா அனுப்பிய நிலையில் தனது முன்னால் காதலனுடன் மனைவி ஓடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here