Home India வாலிபரிடம் வசமாக சிக்கினர் முகநூலில் நேரலை , துணி காயப்போடும் வராண்டாவில் வாக்கு இயந்திரம்

வாலிபரிடம் வசமாக சிக்கினர் முகநூலில் நேரலை , துணி காயப்போடும் வராண்டாவில் வாக்கு இயந்திரம்

SHARE

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் , ஒரு வீட்டு வாசலில் சர்வசாதாரணமாக வாக்கு இயந்திரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் தனது முகநூலில் நேரடியாக லைவ் போட்டு காட்டியுள்ளார். ”இது பழைய வீடியோ , கெட்ட பேரு உருவாக்க செய்றாங்க, இது ஏமாத்து வேல” என்ற பேச்சிற்கு இடம் கொடுக்காத வகையில் அந்த வாலிபர் போட்ட நேரடி ஒளிபரப்பு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ராஜஸ்தான் மாநிலம் பலி பகுதியில் வசிக்கும் திலீப் என்பவர் தான் இதை வெளி உலகிற்கு லய்வ் போட்டு படம் பிடித்து காட்டியுள்ளார். ஒரு தனி நபருக்கு சொந்தமான வீட்டில் எப்படி வாக்கு இயந்திரம் வந்தது என அவர் காணொளியில் கேள்வி கேட்க, சிலர் அவரை தடுக்க முயற்படுகின்றனர். தொடர்ச்சியாக அவர் வீடியோ எடுக்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வாக்கு இயந்திரம் அருகே பெண் நிற்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது. கடைசி வரை அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த செய்தி வெளியாகும் 5 மணி நேரத்திற்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் தரப்பில் இது குறித்து என்ன விளக்கம் தரப் போகின்றார்கள் என்பதை பொறுத்து இருந்த தான் பார்க்க வேண்டும்.

5 மணி நேரத்திற்கு முன்னதாக திலீப் என்பவரின் முகநூல் நேரலை

பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.

தேர்தல் ஆணையத்திற்கு டேக் செய்து ஏராளமானோர் இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here