Home India தற்கொலைக்காக தூக்கில் தொங்கிய பெண்ணை சினிமா பாணியில் உயிருடன் காப்பாற்றிய போலிசார்

தற்கொலைக்காக தூக்கில் தொங்கிய பெண்ணை சினிமா பாணியில் உயிருடன் காப்பாற்றிய போலிசார்

SHARE

உபி மாநிலம் லக்னோவில் தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கிய பெண்ணை சினிமா பாணியில் கதவை உடைத்து உபி மாநில போலிசார் உயிருடன் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரம் தாமத்திருந்தாலும் அந்த பெண் உயிரிழந்திருப்பார். சாமர்த்தியமாக செயல்பட்ட போலிசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

உபி மாநிலம் லக்னோ தாகுர்கஞ் பகுதியில் உள்ள போலிசாருக்கு ஒரு பெண் கதவை அடைத்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார் என போன் கால் வந்துள்ளது.

தகவல் கிடைத்த உடன் சிறிதும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு வந்தனர் அப்பகுதி போலிசார். போலிசார் வரும் போது அந்த பெண் கதவை அடைத்து கொண்டு கழுத்தில் கயிறை மாற்றிக் கொண்டு ஸ்டூல் மேல் நின்று கொண்டிருந்துள்ளார்.

ஜன்னல் வழியாக அந்த பெண்ணிடம் 10 நிமிடம் வரை சாதுர்யமாக பேசிய போலிசார் என்ன பிரச்சனையா இருந்தாலும் நாங்க சரி செய்கின்றோம் எனக் கூறி சமாதனப்படுத்த முயற்சித்தனர். பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த பெண் ஸ்டூலை தள்ளிவிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள போனார்.

உடனடியாக கதவை உடைத்த போலிசார் கயிற்றில் தொங்கிய படி இருந்த அந்த பெண்ணை அப்படியே தூக்கி அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் காணொளி வெளியாகியுள்ளது. வேலைக்கு போகாத கணவர் மாமியார் கொடுமை என குடும்ப பிரச்சனை காரணமாக தான் தற்கொலைக்கு முயன்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.

தற்கொலை முயற்சிக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலிசார் கைப்பற்றினர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here