Home India ஓடும் பேருந்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை கண்டு கொள்ளாத சக பயணிகள்

ஓடும் பேருந்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை கண்டு கொள்ளாத சக பயணிகள்

SHARE

டெல்லியில் 19 வயது கல்லூரி மாணவிக்கு 30 க்கும் மேற்பட்ட பணிகள் இருந்த ஓடும் பஸ்சில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து தான் பதிவு செய்த காட்சியை அந்த மாணவி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் அனைவரும் கோபத்தின் உச்சிக்கே சென்று விடும் அளவிற்கு அந்த காணொளி அமைந்துள்ளது.

தனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய ஒருவன் அவனது மடியில் பேக்கை வைத்து மறைத்து கொண்டு தனது ஆணுறுப்பை வெளியே எடுத்து எழுதுவதற்கே கை கூசும் அளவிற்கு மோசமாக நடந்துள்ளான். அதோடு அந்த பெண்ணின் இடுப்பை தடவியுள்ளான். அந்த பெண் இதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

மேலும் சக பயணிகளிடம் உதவியும் கோரியுள்ளார் ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை என தனது புகாரில் மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் மிருகத்திலும் மோசமாக நடந்து கொண்ட அவன் தன்னை மிரட்டியதாகவும் மாணவி தனது புகாரில் கூறியுள்ளார்.

”நான் பேருந்தில் டெல்லி வசந்த் விஹார் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது எனது பக்கத்தில் ஒருவன் அமர்ந்தான். பேருந்தில் 30 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். சற்று நேரம் சென்றதும் அவனது ஆணுப்பை வெளியே எடுத்து என்னை நோக்கி…. மேலும் எனது இடப்பை சுமார் 10 நிமிடத்திற்கும் மேலான தடவினான் நான் சத்தம் போட்டேன் நீ என்ன பன்னிகிட்டு இருக்க என்னிடம் என அவனிடம் கேட்டேன் என்னை அவன் மிரட்டினான் மற்ற பயணிகளிடம் உதவி கேட்டேன் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை வேடிக்கை மட்டுமே பார்த்தனர் அவனது இறங்குமிடம் வந்ததும் அவன் எதுவுமே நடக்காதது போன்று இறங்கி சென்றான்.

வீட்டிற்கு வந்து எனது பெற்றொரிடம் கூறினேன் அவர்கள் அச்சப்பட்டார்கள். முதலில் புகார் அளிக்க வேண்டாம் என்றனர், பின்னர் நான் எனது டிவிட்டர் அக்கொண்டில் அந்த காணொளியை வெளியிட்டேன் 3 நாள் கழித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன் அங்கு சென்றால் பேருந்தில் எப்படி எனக்கு ஒரு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டதோ அதே நிலையை காவல் நிலையத்தில் நான் உணர்ந்தேன். சம்பவம் நடந்த போது வராமல் 3 நாள் கழித்து ஏன் வந்துருக்க என எனது புகாரை அவர்கள் வாங்கவில்லை. கிட்ட தட்ட 6 மணி நேரமாக நான் காவல் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டேன்

பெண்கள் மனித உரிமை ஆணையர் தலையிட்டு புகாரை பதிவு செய்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் இது, இதுவரை அவனை போலிசார் கைதும் செய்யவில்லை சக பயணிகளும் உதவிக்கு முன் வரவில்லை காவல் துறையும் அலட்சியம் காட்டினால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது” என வருத்தத்துடன் அநத மாணவி பேட்டி அளித்துள்ளார்.

மகள் வயதுடைய பெண்ணிடம் 30 பயணிகள் சூழ்ந்திருக்க எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவிற்கு வெறிபிடித்து நடந்த கொண்ட இவனுக்கு கடுமமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

”ஒரு நடிகை ரயிலில் தனக்கு ஒருவன் தொந்தரவு கொடுத்தான் என்றும் அது தலைப்பு செய்தியாகி அடுத்த அரை மணி நேரத்தில் அவன் கைது செய்யப்படுகின்றான்.

ஆனால் மிருகத்திலும் மோசமாக இங்கு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. நடிகைகளுக்கு மட்டும் தான் கற்பு இருக்கின்றதா சாதாரண எங்களை போன்ற பெண்ணின் கற்பிற்கு மதிப்பில்லையா நடிகையாக இருந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களா ? முக்கியத்துவம் கொடுப்பார்களா ?” என பாதிக்கப்படும் பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here