Home Headline Dipa karmakar decided to reture Sachin BMW Car

Dipa karmakar decided to reture Sachin BMW Car

SHARE

ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்த வீராங்கனை தீபா கர்மாகருக்கு, பேட்மின்டன் கழகம் சார்பில் கிரிக்கெட் வீரர் சச்சின் அளித்திருந்த சொகுசு காரான பிஎம்டபிள்யு காரை திரும்ப கொடுத்து விட்டார். அந்த காருக்கு செலவு செய்தால், என்னால் தாக்கு பிடிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வென்ற வெள்ளி மங்கை சிந்து, மல்யுத்தத்தில் வென்று வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், ஜிம்னாசியத்தில் சாதனை படைத்த தீபா கர்மாகர் ஆகியோருக்கு விலை உயர்ந்த சொகுசு காரான பிஎம்டபிள்யு கார் பரிசளிக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த பரிசுகளை வழங்கினார். இதில் தீபா கர்மாகருக்கு ஐதராபாத் பேட்மின்டன் கழகத்தின் தலைவர் சாமுன்டேஸ்வரநாத்தின் சார்பில் தீபாவுக்கு காரை டெண்டுல்கர் வழங்கினார்.

இது தீபாவின் முடிவு அல்ல என்றும், அவரது குடும்பத்தினர் முடிவு என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அவரது பயிற்சியாளர் பிஷ்வேஸ்வர் நந்தி கூறுகையில், ‘‘ஜெர்மனியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தீபா தயாராக வேண்டும் என்பதே முக்கியமான காரணமாகும். காருக்கு பதிலாக அதற்கு இணையான தொகையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை தீபாவின் வங்கி கணக்கில் செலுத்தினால் மகிழ்ச்சி அடைவோம் என்று குடும்பத்தினர் பேட்மின்டன் கழகத்திற்கு தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினார். இந்த விவகாரம் விளையாட்டு துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here