Home Tamil Nadu எஸ் வி சேகர் கவுதமன் காரசார விவாதம் இணையதளத்தில் பரவும் நேருக்கு நேர் விவாத வீடியோ

எஸ் வி சேகர் கவுதமன் காரசார விவாதம் இணையதளத்தில் பரவும் நேருக்கு நேர் விவாத வீடியோ

SHARE

பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக சார்பில் கலந்து கொண்ட எஸ்வி சேகர் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நான் ஏன் போராட வேண்டும் அதான் அமைப்பாங்கல்ல எனக் கூறியுள்ளார். மேலும் தமிழகம் என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் அவ்வளவு தான் உங்களுக்கு மட்டுமே தான் பிரதமர் செய்யனுமா எனவும் எஸ்சி சேகர் கூறியுள்ளார்.

எதிரில் விவாதித்த கவுதமன் அவர்களை போ வா என எஸ்சி சேகர் பேசினாலும் நிதானமான முறையில் கவுதமன் பதில் அளித்ததை காணொளியில் காண முடிகின்றது.

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு கைக் கூலியாக நடித்தி வருகின்றனர் எனக் கூறிய எஸ்வி சேகருக்கு கவுதமன் சவால் ஒன்றை முன் வைத்தார்.

இதை நீங்கள் நிரூபித்தால் நான் எனது பொது வாழ்வில் இருந்து விலகிக் கொள்கின்றேன் . நிரூபிக்கவில்லை எனில் நீங்கள் விலகிக் கொள்ள தயாரா எனக் கவுதமன் கேட்டதற்கு அப்ப நீங்க நிரூபிக்க முடியாத வகையில வாங்கியிருப்பீங்க என எஸ்வி சேகர் பின் வாங்கியதை காணொளியில் காண முடிகின்றது.

மேலும் நியுட்ரினோ ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க தமிழக மக்களை ஏன் கேட்க வேண்டும் எனவும் எஸ் சி சேகர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வசித்துக் கொண்டு இப்படி தமிழகத்திற்கு எதிராக பேசுகின்றாரே என சமூக வலைதளதத்தில் இந்த காணொளி தற்போது பரவி வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here