Home Tamil Nadu லஞ்சமா கேக்குற ஆடியோவுடன் போட்டு விட்ட நபர் , பறிபோன வேலை சென்னை கமிஷ்னரின் அதிரடி...

லஞ்சமா கேக்குற ஆடியோவுடன் போட்டு விட்ட நபர் , பறிபோன வேலை சென்னை கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை

SHARE

சென்னையில் புகார் அளிக்க வந்தவரிடம் காம்ரமைஸ் பன்னி விட்டுர்றேன் 2.5 லட்சம் ரூபாய் தாங்கள் என கேட்ட மத்திய குற்றப்பிரிவு எஸ் ஐ சிவஜானம் மற்றும் சந்தியா ஆகிய இருவரையும் சென்னை கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் பணியிடம் நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகேந்திரன் என்பவர் ஆவண மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது இந்த கேசை சுமூகமாக முடிக்க எஸ் ஐ சிவஜானம் 2.5 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான ஆடியோவுடன் மகேந்திரன் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து லஞ்சம் கேட்டதாக இரண்டு எஸ் ஐ க்களும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ”சார் நான் 50 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்துருக்கேன் சார் என புகார் அளிக்க வந்தவர் கூற என்னப்பா நீ முன்னாடி ஒன்னு சொல்லிட்டு இப்ப ஒன்னு சொல்ற அப்பவே நினைச்சேன் இந்த மாறி ஏடா கூடம் ஆகும் னு நான், சொல்லி தான் அவரு காம்பரமஸ் ஆனாரு தெரியும்ல…” என உரையாடல் செல்கின்றனது.

50 ஆயிரம் வாங்குனது பத்தாதுன்னு இன்னும் கேக்குறாரே என மகந்தேரன் ஆத்திரப்பட்டாரோ என்னவோ போன் உரையாடலுடன் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சென்னை கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் எஸ் ஐ க்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்துள்ளார்.

சென்னை கமிஷ்னர் அவர்களின் இந்த அதிடிர நடவடிக்கை லஞ்சம் வாங்கும் போலிசார் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here