Home Tamil Nadu மீண்டும் திமுக நிகழ்ச்சியில் வடிவேலு வடிவேலு பேட்டி

மீண்டும் திமுக நிகழ்ச்சியில் வடிவேலு வடிவேலு பேட்டி

SHARE

நேற்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் சோனியா காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவுடன் கமல் கூட்டணி வைக்கப் போகின்றார் என செய்திகள் பரவிய நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கமல் அறிவித்தார். கட்சி பணி இருப்பதாக கூறி நிகழ்ச்சியை அவர் தவிர்த்தார். ஆனால் ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கூறினார்.

முன்னர் திமுக நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசி அது வைரலாகி அதற்கு பின்னர் வடிவேலு பல பிரச்சனைகளை சந்தித்தார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வடிவேலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடிவேலு பேட்டி அளித்துள்ளார்.

அதில், கருணாநிதி அவர்கள் எதையும் சமாளிக்கக் கூடிய தலைவர் , எந்த பிரச்சனையையும் லாவகமாக எதிர் கொள்வார். பிரச்சனைகளை அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்பம் திறன் கொண்டவர். கரணாநிதி அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. மிகப் பெரும் போராட்டங்களை அவர் சந்தித்துள்ளார் அவரை தவிர வேறு யாராலும் இது முடியாது. பொறுமைக்கு தைரியத்திற்கும் உதாரணம் கருணாநிதி அவர்கள். தன் மீது எரிந்த கல்லை எரிந்தவர்களுக்கே திருப்பி அனுப்புவார். கருணாநிதியின் தைரியம் நம்மிடம் இருந்தால் யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என வடிவேலு கருணாநிதியை பற்றி பேட்டி அளித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here