Home Tamil Nadu கோவையில் வாலிபரை மரத்தில் கட்டி வைத்து உருட்டு கட்டையால் இளம் பெண் தர்மஅடி வைரலாகும் வீடியோ

கோவையில் வாலிபரை மரத்தில் கட்டி வைத்து உருட்டு கட்டையால் இளம் பெண் தர்மஅடி வைரலாகும் வீடியோ

SHARE

கோவையில் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு இரண்டு இளைஞர்களை இளம் பெண் உட்பட பொதுமக்கள் பிடித்து உருட்டு கட்டையால் தர்ம அடி கொடுத்துள்ளார். இதன் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

கோவை மாவட்டம் மதுக்கரை தாலுக்கா வெள்ளலூர் பகுதியில் தனியாக இருக்கும் பெண்கள் சிறுமிகள் மற்றும் முதியவர்களிடம் இரண்டு வாலிபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் தனியாக நடந்து சென்ற தமையந்தி என்ற பெண்ணின் சங்கிலியை பைக்கில் சென்ற வாறு பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண் சுதாரித்துக் கொண்டு திருடனின் கையை பிடித்து இழுக்க திருடர்கள் நிலை தடுமாறி தப்பியோட முயற்சித்துள்ளனர்.

பின்னர் இளம் பெண் மற்றும் பொதுமக்கள் சேர்ந்த திருடர்கள் இருவரையும் பிடித்து உருட்டு கட்டையால் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

இறுதியில் காவல்துறையிக்கு தகவல் கொடுக்கப்பட்டு திருடர்கள் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரனையில் இருவரும் சென்னையை சேர்ந்த கார்த்திக், விஜயராகவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் கோவை சாய்பாபா காலனி அருகே ஏற்கனவே ஒரு பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறை திருடும் போதும் பொதுமக்கள் பிடித்து கொடுப்பது பின்னர் திருடர்கள் வெளியே வந்து மீண்டும் திருடுவது பின்னர் மீண்டும் பொதுமக்கள் பிடிப்பதுமாக இருந்தால் எப்படி குற்றங்கள் குறையும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here