Home India உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பெண் துரத்தும் கும்பல் வீடியோ எடுக்கும் கூட்டம் வைரலாகும் வீடியோ

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பெண் துரத்தும் கும்பல் வீடியோ எடுக்கும் கூட்டம் வைரலாகும் வீடியோ

SHARE


பீஹார் மாநிலத்தில் பெண் ஒருவரை ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் இளைஞர் கொண்ட கும்பல் ஊர்வலமாக இழுத்து சென்று தாக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள பிஹியா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண்ணை நிர்வாணமாக்கி அவரை ஊர்வலமாக நடக்கவிட்டதோடு நிர்வாணமாக அவர் நடந்து செல்லும் போது அந்த பெண்ணை இளைஞர்கள் சேர்ந்து ஏறி மிதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கொடுமையான விசயம் என்னவெனில் இது அனைத்து சில காவல்துறையினரின் கண் முன்னே நடந்துள்ளது. (பின்னர் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்)

விமலேஷ் என்ற இளைஞர் இறந்த நிலையில் சடலமாக அந்த பகுதியில் உள்ள ரயில்வே ட்ராக்கில் கிடந்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆத்திரடைந்து அந்த பகுதியில் இருந்த கடைகள் வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக அந்த பகுதியில் கொலை நடக்கின்றது என்பது அவர்களின் புகார்.

அந்த பையன் கடைசியாக இந்த பெண்ணுடன் தான் இருப்பதை பார்த்தோம் என சிலர் கூற இவள் தான் கொலை செய்திருப்பார் என சந்தேகப்பட்ட அந்த கும்பல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்து அவரது அடையை இரக்கமே இன்றி முழுவதுமாக நீக்கி உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளது.

இழுத்து செல்லும் போது நிர்வாணமாக இருக்கும் அந்த பெண்ணை இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஏறி மிதிக்கின்றது. அதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

இது அனைத்தும் சில காவலர்களின் கண் முன்னே நடந்துள்ளது. அவர்கள் கும்பலை சமாளிக்க முடியாமல் மக்களோடு சேர்ந்து வேடிக்கை பார்த்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறியுள்ளனர்.

கலவரம் செய்த அந்த கும்பல் கொழுத்தியதில் போலிஸ் வாகனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து 5 க்கும் மேற்பட்ட அந்த பகுதி ஸ்டேஷன் போலிஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ வெளியானதை தொடர்ந்து தானாக முன் வந்து தேசிய மகளீர் ஆணையம் அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளளது.

5 மணி நேரம் அந்த பெண்ணை வைத்து அட்டுழியம் செய்துள்ளது கும்பல். இறுதியில் அந்த பெண் மீட்கப்பட்டு தற்போது போலிசில் பாதுகாப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை என போலிசாரிடம் அந்த பெண் கூறியுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கும்பலை சேர்ந்த யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. 72 வது சுதந்திர தினம் கொண்டாடிய ஒரு சில தினங்களில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நாட்டில் சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ குற்றவாளிகளுக்கு தான் அதிகம் கிடைத்துள்ளது என சமூக வலைதளத்தில் பலர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here