Home Headline BSNL Prepaid Diwali Offer

BSNL Prepaid Diwali Offer

SHARE

திபாவளியை முன்னிட்டு பல்வேறு ஆஃபர்களை BSNL அறிவித்துள்ளது. BSNL நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின் வரும் ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது:

தீபாவளியை முன்னிட்டு பிஎஸ்என்எல் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் அக்.31ம் தேதி வரை பேசுவதற்கான பூஸ்டர் போட்டால் கூடுதல் பேசும் நேரம் கிடைக்கும். அதன்படி 449 ரூபாய்க்கு பூஸ்டர் பயன்படுத்தினால் வழக்கமாக வழங்கப்படும் 1400 நிமிடங்களுக்கு பதில் 1540 நிமிடங்களுக்கு பேசலாம். அதேபோல் 359 ரூபாய்க்கு பூஸ்டர் போட்டால் 52ஆயிரம் வினாடிகளுக்கு பதில் 57,200 வினாடிகளுக்கும், 201 ரூபாய்க்கு பூஸ்டர் போட்டால் 26,800 வினாடிகளுக்கு பதில் 29,480 வினாடிகளுக்கும், 159 ரூபாய்க்கு பூஸ்டர் போட்டால் 20,300 வினாடிகளுக்கு பதில் 22,330 வினாடிகளுக்கும் பேசலாம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 13 ரூபாய்க்கு டாப்அப் செய்தால் 2 நாட்களுக்கு 15 ரூபாய்க்கு பேசலாம், 10 எம்பி இன்டர் ேடட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல் 77 ரூபாய்க்கு டாப் அப் செய்தால் 10 நாட்களுக்கு 80 ரூபாய்க்கு பேசலாம், 30 எம்பி இன்டர்நெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் 177 ரூபாய்க்கு டாப் அப் செய்தால் 15 நாட்களுக்கு 180 ரூபாய்க்கு ேபசலாம், 50 எம்பி இன்டர்நெட் டேட்டாவும் கிடைக்கும்.

bsnl-2016-diwaly-offer

இவை தவிர இரு மடங்கு இன்டர்நெட் டேட்டா கிடைக்கும் புதிய சலுகைகளையும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 1,498 ரூபாய்க்கு 9 ஜிபி இன்டர்நெட் டேட்டா பெறுபவர்களுக்கு இனி 18 ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் 2,798 ரூபாய்க்கு 18ஜிபி பெறுபவர்களுக்கு 36 ஜிபியும், 3,998 ரூபாய்க்கு 30 ஜிபி பெறுபவர்களுக்கு 60 ஜிபியும், 4,498 ரூபாய்க்கு 40 ஜிபி பெறுபவர்களுக்கு 80 ஜிபி இன்டர்நெட் டேட்டாவும் கிடைக்கும். இந்தச் சேவைகளை அக்.31ம் தேதி வரை பெறலாம்.

சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துக் கொள்ளுமாறு BSNL ல் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here