Home India தெருவில் விளையாடி சிறுமியை கடித்து குதறிய செல்ல பிராணி நாய் உயிரை காப்பாற்றிய மற்றுமொரு சிறுமி

தெருவில் விளையாடி சிறுமியை கடித்து குதறிய செல்ல பிராணி நாய் உயிரை காப்பாற்றிய மற்றுமொரு சிறுமி

SHARE


வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திய 6 வயது சிறுமியை செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கடித்து குதறியதில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை அடித்து விரட்டி சிறுமியை காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

சென்ற மாதம் இந்த சம்பவம் ஹரியான மாநிலம் ஓமக்ஸ் சிட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் உள்ள வீடு மற்றும் தெருக்களில் நாய் வளர்கப்படும் பட்சத்தில் தனியாக குழுந்தைகளை விடும் விசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நாயை வளர்த்தவருக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறுமியை நாய் தாக்கியதை தொடர்ந்து அந்த நாயின் ஓனரையும் போலிசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் ஜாமினில் வந்துள்ளார்.

தெருவில் 6 வயது சிறுமி நனது நண்பர்களுடன் விளையாடுகின்றார். பின்னர் சைக்கிளை வீட்டு வாசலில நிறுத்தும் போது வீட்டு வாசலில் நின்று நாய் அவரை துரத்தி பாய்ந்து தாக்க துவங்கியது. சிறுமியால் நாயை சமாளிக்க முடியாததல் தரையில் விழுக்கின்றார். தொடர்ச்சியாக நாய் அவரது முதுகு முகம் கழுத்து என எல்லா இடங்களில் கடித்து குதறுகின்றது.

நாயால் தாக்கப்பட்ட சிறுமி

சிறுமி தரையில் உருண்டு அலறுகின்றார். சிறுது நேரம் கழித்து ஒரு பெண் தனது வீட்டிற்குள் இருந்தவராரே ஒரு கம்பை நீட்டி நாயை விரட்ட பார்க்கின்றார். ஆனால் நாய் அந்த சிறுமியை விடவில்லை.

சிறுமியின் உடல் முழுவதும் கடித்துள்ள நாய்

பின்னர் அந்த பகுதியில் உள்ள மற்மொரு சிறுமி துணிச்சலாக ஒரு கம்பை எடுத்துக் கொண்டு முதல் ஆளாக வந்து நாயின் அருகில் சென்று நாயை விரட்டி விடுகின்றார். சிறுமியை பார்த்த மற்றவர்களும் அருகில் வந்து நாயை அடித்து விரட்டி சிறுமியை மீட்டனர்.

பலத்த காயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாய் வளர்ப்பவர்களும் சிறு குழந்தைகள் வைத்துள்ளவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here