Home Tamil Nadu அய்யா கண்ணுவை கண்ணத்தில் அறைந்த பெண் மருத்துவமனையிலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ

அய்யா கண்ணுவை கண்ணத்தில் அறைந்த பெண் மருத்துவமனையிலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ

SHARE

விவசாயிகள் சங்க தலைவர் அய்யா கண்ணு மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்ற அய்யா கண்ணு கோவிலுக்கு வேளியே வந்து வளாகத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நோட்டிசை கோவிலுக்கு வந்தவர்களிடம் வழங்கினார்.

இதை பார்த்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளீர் அணி நிர்வாகி , நோட்டிசை வாங்கிய பெண்களிடம் ”இவன் ஒரு ஃபிராடு இவன் கொடுக்கும் நோட்டிசை வாங்காதீங்க எனக் கூறி பெண்கள் கையில் இருந்த நோட்டிசை பறித்தார் மேலும் நோட்டிஸ் கொடுப்பதை தடுத்து அய்யா கண்ணுவை வெளியே போகுமாறு கூறினார்.

பெண் ஒருவர் பலர் முன்னிலையில் தன்னை .பிராடு எனக் கூறியதும் இதை சற்றும் எதிர் பார்க்காத அய்யா கண்ணு கோபத்தில் அந்த பெண்ணை திட்டியுள்ளார். வாக்கு வாதம் ஏற்பட்டு அந்த பெண் அய்யா கண்ணுவின் கண்ணத்தில் அறைந்தார்.

பின்னர் சண்டை பெரிய அளவில் மூண்டு இரு தரப்பும் தகாத வார்த்தைகளை பேச ஆரம்பிக்க , பாகஜ பெண் தனது செருப்பை கழட்டி அய்யா கண்ணுவை அடிக்க பாய அங்கிருந்த பெரியர்கள் சண்டையை தடுத்தனர்.

இது தொடர்பாக அய்யா கண்ணு பேட்டி கொடுத்த போது , இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதையை பிரதமர் மோடி அனுமதிக்கக் கூடாது இதற்காக பிரார்த்தனை செய்ய வந்தோம். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பிரதமர் மோடி செயல்படுகின்றார். இதற்காக எங்களை அந்த பெண் பிரார்த்தனை செய்ய விடாமலும் நோட்டிஸ் கொடுக்க விடாமலும் தடுத்தார்” எனக் கூறினார்.

அய்யா கண்ணுவை கண்ணத்தில் அறைந்த பெண் மருத்துவமனையிலிருந்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

தன்னை அய்யா கண்ணு தாக்கியதாகவும் அதனால் தனக்கு மூச்சு திணறல் வந்து விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here