Home World பஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்

பஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்

SHARE


பஞ்சர் மற்றும் டயருக்கு காற்று அடிக்கும் கடைக்கு அருகில் நிற்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சைனாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மத்திய சைனாவில் உள்ள ஹுபே மாகானத்தில் Danjiangkou என்ற பகுதியில் பஞ்சர் மற்றும் வாகனம் பழுது பார்க்கும் கடை இருந்துள்ளது. ஊழியர்கள் பழுது பார்த்த டயருக்கு காற்று அடித்துள்ளனர். காற்று அடிக்கும் இயந்திரத்தை போட்டு விட்டு அதை ஆஃப் செய்யாமல் மற்ற வேலைகளை பார்க்க துவங்கினர். அந்த டயர் அருகே ஒரு பெண் தனது கைக் குழநதையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கு , டயருக்கு ஏற்றப்பட்ட காற்று அதிகமாகி டயர் திடீர் என வெடிக்கின்றது.

இதில் டயருக்கு அருகே தனது கைக் குழந்தையுடன் நின்ற பெண் தூக்கி வீசப்படுகின்றார். அவரது கையில் இருந்த குழந்தை அவரது கையை விட்டு தூக்கி வீசப்படுகின்றது. இதில் தாய் மற்றும் குழந்தை சிரிய காயங்களுடன் தப்பித்தனர்.

உடனடியாக வேலை பார்க்கும் நபர்கள் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

தூக்கி வீசப்பட்ட பெண்ணும் அந்த கடையில் பணிபுரிபவர் என Danjiangkou பகுதி போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் ”தனக்கு ஏற்பட இருந்த ஆபத்து தெரியாமல் அந்த பெண் டயரிக்கு ஒரு அடி அருகே நின்றிருந்தார் அவரும் அந்த கடையில் பணிபுரிபவர் , குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த மாதம் ஆரம்பத்தில் நடைபெற்றது என Danjiangkou பகுதி போலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here