Home Tamil Nadu சஸ்பெண்ட் செய்யப்பட்ட பழனி ஓட்டுனர் பரபரப்பு பேட்டி

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பழனி ஓட்டுனர் பரபரப்பு பேட்டி

SHARE

தான் ஓட்டும் அரசு பேருந்தில் உள்ள அவலத்தை காணொளி மூலம் பதிவு செய்த பழனியை சேர்ந்த ஓட்டுனர் விஜயகுமார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேருந்தை இயக்கிக் கொண்டு பேசியதாக அவர் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அரசு பஸ்சில் உள்ள குறைகளை கூறியதற்காக வேலை பறிபோன ஓட்டுனர் விஜயகுமார் இன்று மீடியாவை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

பஸ்சில் பேசக் கூடாது என ஏதும் சட்டம் உள்ளதா ? நான் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது பிறகு ஏன் மேனேஜர் எனக்கு போன் செய்தார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஓட்டுனர் விஜயகுமார்.

போன் பேசிக் கொண்டா நான் பஸ்சை ஓட்டினேன் நான் பேசியதற்காக என்னை காலவரையற்ற இடை நீக்கம் செய்துள்ளார்கள் எனக்கு வேலை திரும்ப கிடைக்க நீங்க தான் ஆவன செய்யனும் என விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here