Home Tamil Nadu மதுரை ஆவின் பால் அலுவலக கேஸ்ட் ரூமில் பெண்களுடன உல்லாசம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாக வாட்சப்பில் பரவும்...

மதுரை ஆவின் பால் அலுவலக கேஸ்ட் ரூமில் பெண்களுடன உல்லாசம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாக வாட்சப்பில் பரவும் வீடியோ

SHARE

மதுரை ஆவின் பால் கூட்டுறை சங்க விவகாரத்தில் ஓ ராஜா அவர்களின் பிரச்சனை முடிவதற்குள் அடுத்து இன்று மற்றுடிமொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஆவின் ஆவின் பால் அலுவலகத்தில் பணிபுரியும் அதிமுகவின் இரண்டு நிர்வாகிகள் நிர்வாண கோலத்தில் ஆவின் பால் அலுவலகத்தின் விருந்தினர் அறையில் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காணொளி வாட்சப்பில் வைரலாக பரவி வருகின்றது.

ஆவின் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பெண்களை அவர்களிடம் உங்களை நிரந்தரமாக்கி விடுகின்றோம் எனக் கூறி இவர்கள் இருவரும் ஆவின் அலுவலகத்தின் கேஸ்ட் அவுசில் வைத்தே உல்லாசத்தில் ஈடுபட்டு வருவதாக வீடியோவை வெளியிட்டவர்களின் தரப்பில் சொல்லப்படுவதாக கூறப்படுகின்றது.

காணொளியில் இடம் பெற்ற நபரை ஆவின் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் காணொளியில் இடம் பெற்றிருக்கும் நபர்கள் ”இது கிராபிக்ஸ் வீடியோ போலியானது அதில் இருப்பது நாங்கள் இல்லை இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை வேண்டும் என்றே எங்களை பழி வாங்க செய்துள்ளார்கள்” எனக் கூறி காவல் நிலையத்தில் காணொளியை வெளியிட்டதாக கூறப்படும் நபர்கள் மீது மிரட்டுவதாக புகாரும் அளித்துள்ளனர்.

ஓ ராஜா அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்ததற்காக எங்களை பழி வாங்குகின்றார்கள் என இருவரும் கூறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பால் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடமும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மதுரை அண்ணா தொழிற்சங்க மாநில இணைச் செயலாளராக உள்ளவர் பரமானந்தம். இவர் மதுரை ஆவின் பால் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார். இன்னோரு நபரின் பெயர் பாண்டி, இவர் ஆவின் பணியாளர் கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் தான் காணொளியில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த விவாகரம் ஆவின் பால் பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களிடம் அவர் மாவட்டம் தொடர்பானது என்பதால் செய்தியாளர்கள் இது பற்றி கேட்ட போது , ”ஆவின் அலுவலகத்தில் அது போன்று நடப்பததற்கு வாய்ப்பில்லை பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார்களா ? நீங்களே அந்த வீடியோ பாருங்க உங்களுக்கு தெரியும், அதே நேரத்தில் யார் தவறு செய்தாலும் அதிமுக நடவடிக்கை எடுக்கும் அதற்கு ஓ ராஜா அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையே பெரிய சான்று எனக் கூறியுள்ளார்.

சிறு வயது பெண்கள் உட்பட பல பெண்களுடன் இருவரும் மாறி மாறி உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் தற்போது வாட்சப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. மதுரை அதிமுக வட்டாரத்தில் இது பெரும் பரரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இது முன்னரே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் போலிசார் முன்னரே விசாரனை நடத்தியில் இந்த வீடியோ தாங்கள் எடுக்கவில்லை எனவும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இது தொடர்பாக விசாரனை நடத்தும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. வீடியோவை மறைமுகமாக யார் பதிவு செய்தது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

சென்சார் செய்யப்பட்ட வாட்சப்பில் பரவும் வீடியோ அமைச்சரின் அது குறித்த விளக்கம் மற்றும் காணொளில் இருப்பதாக கூறப்படும் நபர்களின் பேட்டி இதில் இடம் பெற்றுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here