Home Tamil Nadu ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய நெல்லை போலிஸ் எஸ் ஐ ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்

ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய நெல்லை போலிஸ் எஸ் ஐ ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்

SHARE

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் போலிஸ் எஸ் ஐ விஜய் சண்முகராஜ் அவர்கள், பணியில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கெட்ட வார்த்தைகளில் பேசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி அதிகாலை ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்துள்ளது. ஆம்புலன்சை ஓட்டுனர் ராமசந்திரன் இயக்கி வந்துள்ளார்.

ஆம்புலன் பாவூர்சத்திரத்தை அடுத்த கே.டி.சி.நகர் அருகே வந்த போது லாரியும் ஒரு காரும் நின்றுள்ளது. லாரியில் இருப்பவர்களிடம் காரில் இருந்தவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த காருக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்து நின்றுள்ளது. ஆம்புலன்சிற்கு வழி விட கார் முயற்சிக்கும் போது ஆம்புலன்ஸ் ட்ரைவர் ஆம்புலன்ஸ் மீது கார் இடிக்காமல் இருக்க சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது.

காரில் இருப்பது எஸ் ஐ என்பது ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு தெரியவில்லை. உடனே காரில் இருந்து இறங்கி வந்த எஸ் ஐ விஜய் சண்முகராஜ், ”எட்ரா என்னைய வா போ ன்னு பேசுவ” என அவரை அசிங்கமான வார்த்தைகளில் பேசி சரமாரியாக தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பைக் சாவியை புடுங்குவது போன்று ஆம்புலன்ஸ் சாவியை புடுங்கி வாகனத்தை நிறுத்தினார் எஸ் ஐ.

இருட்டில் அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது. அவருடன் வந்த பெண் சார் விடுங்க சார் தெரியாம சொல்லிட்டாரு என கெஞ்சியும் ஆம்புலன்ஸ் ட்ரைவரை இழுத்து போட்டு தாக்குகின்றார்.

மேலும் அவரது ஆம்புலன்சையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துக் சென்றுள்ளார்.

தகவல் அறிந்த சக ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள் ஆம்புலன்ஸ் ட்ரைவரை எஸ் ஐ அசிங்கமாக பேசி தாக்கியதாக காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தி ஆம்புலன்ஸ் ட்ரைவரை மீட்டுள்ளனர்.

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் பணியில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை நிறுத்தி அசிங்கமாக பேசி எஸ் ஐ ஒருவர் தாக்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி , எஸ் ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

”அவர் வா பே என பேசியது தவறு எனில் அவரது முகவரியை குறித்து வைத்து விட்டு அவரை பணி முடிந்து காவல் நிலையத்திற்கு வர சொல்லி இருக்கலாம், அல்லது அதற்குரிய வழக்கு போட்டிருக்கலாம், அவர் சார் நான் யாருன்னு தெரியாம சொல்லிட்டேன் என்ன மன்னிச்சுருங்க என கெஞ்சியும் அவரை வாகனத்தை விட்டு இழுத்து போட்டு அடித்து அசிங்கமாக பேசுவது சரியா என சமூக வலைதளத்தில் பலர் கண்டனங்களை பதிவு செய்து இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here