Home Tamil Nadu சென்னை காவல் துறை எனக்கு 2 வது வாழ்கை கொடுத்துள்ளது வீடு திரும்பிய லாவண்யா பேட்டி

சென்னை காவல் துறை எனக்கு 2 வது வாழ்கை கொடுத்துள்ளது வீடு திரும்பிய லாவண்யா பேட்டி

SHARE

சென்னை கிண்டியில் பணியாற்றிய பெண் ஐடி ஊழியர் லாவண்யா அரசன்கழனி என்ற பகுதி அருகே கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்பொழுது

”தமிழ்நாடு போலிஸ் எனக்கு 2 வது வாழ்கையை கொடுத்துள்ளது. அவர்களை எனது குடும்பமாக பார்க்கின்றேன் அவர்கள் இல்லை எனில் நான் தற்போது உயிருடன் இருந்திருக்க முடியாது. அனைத்து மக்களுக்கும் நான் சொல்ல ஆசைப்படுகின்றேன் காவல் துறை எனது குடும்பம் சென்னை காவல்துறையை தலை வணங்குகின்றேன். இன்ஸ்பெக்டர் சிவகுமாரை இறைவன் எனக்கு ஒரு சகோதரராக வழங்கியுள்ளான். இனி எனது அனைத்து நிகழ்ச்சிகளும் அவர் இருப்பார், அவர் எனது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி விட்டார்.

பெண்களுக்கு அச்சுறுத்தலான ஒரு கட்டம் வரும் போது அடுத்த என்ன செய்யப் போகின்றோமே என பயப்பட வேண்டாம் துணிச்சலாக முன் செல்லுங்கள் அதே நேரத்தில் நீங்கள் நன்றாக இருக்கும் போது மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பொழுது தான் நமக்கு மோசமான நிலை வரும் போது யாராவது நமக்கு உதவி செய்வார்கள்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதை மறந்து விடாதீர்கள்”

என லாவண்யா பேட்டி அளித்தார்.

கொள்ளையர்களின் தாக்குதலில் முகமே சிதைக்கப்பட்ட சுயநினைவின்றி இருந்து லாவண்யா மிக குறுகிய காலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் அளவிற்கு உடல் நலம் தேறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here