Home Headline இலங்கை அதிகாரி காணொளியை முதலில் வெளியிட்டவரின் கணக்கை முடயக்கி ஃபேஸ்புக்

இலங்கை அதிகாரி காணொளியை முதலில் வெளியிட்டவரின் கணக்கை முடயக்கி ஃபேஸ்புக்

SHARE

சோசியல் மீடியாவில் நம்பர் ஒன்னாக பெயர் எடுத்த ஃபேஸ்புக் அதீத வளர்ச்சியை எட்டியதும் தனது பாதையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து ஏற்றிவிட்ட மக்களை எட்டி மிதிக்க ஆரம்பித்துள்ளது.

அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு பயந்து எப்படி தொலைக்காட்சிகளில் மற்றும் பத்திரிக்கைகளில் மக்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்து எல்லோரும் ஃபேஸ்புக் பக்கம் திரும்பினார்களோ , தற்போது அதே வேலையை ஃபேஸ்புக்கும் செய்ய துவங்கிவிட்டது என புகார் எழுந்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக இதற்காக பல்வேறு மாறுதல்களை ஃபேஸ்புக் செய்துள்ளது. இதை நிதர்சனமாக பின் வரும் இரண்டு உதாரணங்கள் நமக்கு புரிய வைக்கிறது

1 அறப்போர் இயக்க காணொளி நீக்கம்
2.லண்டன் இலங்கை அதிகாரி காணொளி நீக்கம்

1.அறப்போர் இயக்க காணொளி

மின்சாரத் துறையில் கோடிக்கணக்கில் நடந்துள்ள மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டது.

அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் என்பவர் இதை வெளியிட்டார். மேலும் இது தொடர்பாக மக்களுக்கு அவரது செல்போனில் அவர் லய்வாக பேசி ஒரு காணொளியையும் அறப்போர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

அற்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் அவர்கள் தான் பேசி லய்வாக வெளியிட்ட காணொளி

இந்த காணொளி அரசியல்வாதிகளின் கண்களை உருத்தியதோ என்னவோ இந்த காணொளியை அவர்கள் நீக்க வேண்டும் என முடிவு எடுத்து காபிரைட் மீடியா என்று ஒரு தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்த நிறுவனம் அடுத்தவரின் காணொளியை மற்றவர் திருடி ஆன்லைனில் வெளியிட்டால் அதை புகார் செய்து ஃபேஸ்புக் யுடுப் உள்ளிட்டவற்றிலிருந்து நீக்குவதற்காக செயல்படும் ஒரு நிறுவனம்.

இந்த காபிரைட் மீடியா நிறுவனம் ஜெயராம் பேசிய காணொளி அதிமுக ஐடி விங்கிற்கு சொந்தமானது என ஃபேஸ்புக்கிற்கு புகார் கொடுத்தவுடன் உடனடியாக ஃபேஸ்புக் அதை நீக்கியும் விட்டது.

நீங்க போட்ட வீடியோ அதிமுகவிற்கு உரியது என வந்த புகாரால் காபிரைட் அடிப்படையில் உங்கள் காணொளியை நீக்கி விட்டோம் என ஃபேஸ்புக் கூறியதோடு அதன் அட்மின் கணக்கையும் முடக்கியது..

தங்களின் காணொளி நீக்கப்பட்டது தொடர்பாக அறப்போர் இயக்கம்

தனது மொபைலில் தான் லய்வாக பேசிய காணொளி எப்படி அதிகவிற்கு சொந்தமாகும் நீங்கள் செய்தது தவறு என ஃபேஸ்புக்கில் அறப்போர் இயக்கம் முறையிட்டும் ஆளும் கட்சியிடமிருந்து புகார் வந்துள்ளது என்பதால் ஃபேஸ்புக் அதை கண்டு கொள்ளவில்லை. காணொளியை நீக்கியது நீக்கியது தான் எனக் கூறிவிட்டது.

சாதாரண விசயத்தையே கிண்டி கிழங்கெடுக்கும் அறப்போர் இயக்கம் இதை லேசில் விடவில்லை. இதற்கு ஏஜெண்டாக செயல்பட்ட காபிரைட் மீடியாவை தொடர்பு கொண்டு சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி அந்த நிறுவனம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைத்து காணொளியை மீண்டும் கொண்டு வந்தது அறப்போர் இயக்கம்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் புகார் கொடுத்தவர் தனது புகாரை வாபஸ் வாங்கியதால் தான் காணொளி மீண்டும் வந்ததே தவிர கொடுத்த புகாரே தவறானது என்பதற்காக ஃபேஸ்புக் காணொளியை மீண்டும் கொண்டு வரவில்லை. தனது பொய்யான புகாரை அவர் வாபஸ் வாங்கவில்லை எனில் அந்த வீடியோ நீக்கப்பட்டபடியே இருந்திருக்கும்.

புகார் கொடுப்பது அதிகாரத்தில் இருப்பவர்களா இருந்தால் புகார் உண்மையா பொய்யா என்று அணு அளவுவும் விசாரிக்காமல் மக்களின் குரலை முடக்கி அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடக்கும் வேலையை ஃபேஸ்புக் செய்ய துவங்கிவிட்டது என இதன் மூலம் புகாரும் எழுந்தது.

2. லண்டன் இலங்கை அதிகாரி காணொளி

லண்டனில் இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கழுத்தை அறுத்து விடுவதாக சமிக்கினை செய்த அதிகாரியின் காணொளியை முதலில் வெளியிட்ட நபரின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது.

இலங்கை அரசு கொடுத்த புகாரில் ஃபேஸ்புக் இந்த வேலைலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஃபேஸ்புக்கால் முடக்கப்பட்ட ஈளம்ரஞ்சன் என்பவரது கணக்கு
செய்துள்ளது.

நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

இப்படி சமீப காலங்களில் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. மக்களின் மீடியா என்று சொல்லப்பட்ட ஃபேஸ்புக் தற்போது 3 ஆம் தர மீடியாவிலும் மோசமாக நடந்து மாறி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றது.

தொலைக்காட்சி நிறுவனமாவது ஊழியர்களை வைத்து சம்பளம் கொடுத்து செய்தி சேகரித்து செய்திகளை வெளியிடுகின்றது, அதில் சம்பாதிக்கின்றது, ஆனால் ஃபேஸ்புக் முழுக்க முழுக்க கோடிக்கணக்கான மக்களின் உழைப்பில் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கின்றது. ஃபேஸ்புக்கில் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படமோ செய்தியோ காணொளியோ ஃபேஸ்புக் ஆட்களை வைத்து திரட்டி வெளியிட்டது அல்ல நெட் பேக்கை காசு கொடுத்து போட்டு உங்களை போன்ற பொதுமக்கள் லைக் கமண்டு கிடைக்கும் என்பதற்காக கஷ்டப்பட்டு உருவாக்கி போடும் செய்திகள் தான். மக்களை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஃபேஸ்புக் அந்த மக்களுக்கே எதிராக செயல்பட துவங்கி விட்டதாக பலர் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

”அறப்போர் இயக்கத்தின் சம்பவத்தை விட ஃபேஸ்புக்கின் டூபாகூர் தனத்தை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை. அவர் மொபைலில் அவர் லய்வா பேசியதை இது உன் வீடியோ இல்லை எனக் கூறி நீக்கியுள்ளது என்றால் இதை விட ஃபேஸ்புக்கின் டூபாகூர் தனத்தை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக உள்ள வீடியோவை நீக்கனும் (அதிகாரத்தில் இருப்பவர்கள் புகார் கொடுத்து விட்டால்) அதுக்கு ஒரு காரணம் தேவை எதையாவது சொல்லி நீக்கி விடுவது. இதுவே ஃபேஸ்புக்கின வாடிக்கையாக உள்ளது” எனக் கூறுகின்றனர் அவர்கள்.

ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் ஃபேஸ்புக்கின் செயலுக்கு அமெரிக்கர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இமார்கெட் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்த ஆண்டு 25 வயதிற்குட்பட்ட 2.8 மில்லியன்அ மெரிக்கர்கள் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பல லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஒரு ஊரில் தொழில் நடத்த அந்த ஊரில் அதிகாரத்தில் இருப்பவர்களி்ன சப்போர்ட் தேவை அவர்களை பகைத்துக் கொண்டு எப்படி தொழில் நடத்த முடியும் , இதெல்லாம் சகஜம் தானே என கிண்டலாக கூறுகின்றனர் மற்றோரு சாரார்.

பதிவுகளை நீக்குவதிலேயே இவ்வளவு உள்ளது எனில் எந்த பதிவுகளை காட்ட வேண்டும் எந்த பதிவுகளை காட்டக் கூடாது என்பதில் எவ்வவு உள்குத்து வேலை இருக்கும் என்கின்றனர் ஒரு சாரார்.

இந்த செய்திய யாரும் புகார் கொடுக்காம இருக்கனும்…………!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here